பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 280க்கும்  மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக பாஹியா மாநிலத்தின் சிவில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாஹியா மாநிலத்தில்  கிட்டத்தட்ட 40 நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் வானிலை மற்றும் இயற்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாஹியா மாநிலத்தில் அதிக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. செவ்வாய்கிழமை வரை மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

இதம்பே நகரில் கனமழை காரணமாக சனிக்கிழமை ஒரு அணை உடைந்துள்ளது.

பிரேசில் வளிமண்டலவியல் திணைக்களம் ஏறக்குறைய பாஹியா மாநிலத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.