வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு 

Published By: T Yuwaraj

27 Dec, 2021 | 04:03 PM
image

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இயந்திரப் படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் நேற்று மாலை (26) மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். 

இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவரே நேற்று ஆழ்கடலில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை அஸன் பாவா வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய முகம்மது இஸ்மாயில் பாரூக் என்பவராவார். 

உயிரிழந்த நபரின் உடல் இன்று (27) கரைக்கு கொண்டுவரப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு...

2023-05-28 17:54:11
news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12
news-image

யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச்...

2023-05-28 18:10:40