பதுளை – பசறை பிரதான வீதியில், ஏழாம் மைல் கல்லருகே இன்று காலை முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஆறு பேர் காயங்களுக்குள்ளாகியதுடன், அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பதுளைப் பகுதியிலிருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும், மொனராகலையிலிருந்து பதுளை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட நால்வரும். மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் அவருடன் வந்தவருமாக இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில், குறித்த அறுவரும் பதுளை அரசினர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து பதுளைப் பொலிசார் இவ்விபத்து குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.