(எம்.எப்.எம்.பஸீர்)
பயில் நிலை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மாத்தறை மாவட்டம் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாத்தறை வலய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழான சிறுவர் மற்றும் மகளிர் பணியக சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப் பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடமையில் ஈடுபட்டிருந்த பயிற்சி நிலை பெண் பொலிஸ் உத்தியோகத்தரை, பொலிஸ் பொறுப்பதிகாரி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த முயற்சித்ததாக கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரத்துக்கு பொறுப்பதிகாரி முயற்சித்த போது அங்கிருந்து போராடி தப்பி வந்துள்ளர். வெளியே வந்தவர் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விடயத்தை கூறவே, அதன் பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாத்தறை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அடுத்த வழக்கு தவணையின்போது அனைத்து சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் இதன்போது பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM