மேல் மாகாணத்தில் உரிய முறையில் முகக் கவசம் அணியத் தவறிய 1,749 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அமுல்படுத்தும் பணிகள் நேற்று 737 பொலிஸ் நடமாடும் ரோந்து பிரிவு அதிகாரிகளின் பங்களிப்புடன் நடத்தப்பட்டது.

இதன்போது 3,012 மோட்டார் சைக்கிள் சாரதிகளையும், 2,439 முச்சக்கர வண்டி சாரதிகளையும் மற்றும் 7,352 பாதசாரிகளையும் பொலிஸார் கண்கணித்தனர்.