அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் தொற்று காரணமாக முதலாவது கொரோனா மரணம்  பதிவாகியுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார சேவைகள் திணைக்களம் டுவிட்டர் பதிவில், 

“மேற்கு சிட்னியைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிபர் ஒருவர் ஒமிக்ரோன் தொற்றினால் வெஸ்ட்மீட் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வடக்கு பரமட்டாவில் உள்ள யுனிட்டிங் லிலியன் வெல்ஸ் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர். அங்கு அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒமிக்ரோன் தொற்று காரணமாக பதிவான  முதல் மரணமாகும் என தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் சுகாதார சேவைகள் திணைக்களம்  தகவலின் படி, உயிரிழந்த வயோதிபர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.