வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்

Published By: Digital Desk 3

27 Dec, 2021 | 09:01 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்ப்பார்க்கும் எந்தவொரு இலங்கையரும்,  அத்திருமணத்தை பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்சின்  'பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்' பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந் நடைமுறை அமுலுக்கு வரும் என சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த 'பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்' முறைமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகர தெரிவித்துள்ளார்.

'உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது,  தற்போதைய பொது திருமண பதிவில் உள்ள பல்வேறு குறைப்பாடுகள் அவதானிப்பட்டுள்ளன. அத்துடன் பல போதைப் பொருள் கடத்தல்காரர்கள்,  கருப்பு பண சுத்திகரிப்பில் ஈடுபடுவோர் சூட்சுமமாக இலங்கை பெண்களை திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

இத்தகைய சூழலிலேயே வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும்  போது பாதுகாப்பு அமைச்சின் ' பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ் ' கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.' என  பதிவார் நாயகம் வீரசேகர குறிப்பிட்டார்.

தற்போதுள்ள பொதுவான திருமணப் பதிவு நடைமுறையின் கீழ், திருமணப் பதிவு செயல்முறையைத் தொடர மூன்று ஆவணங்கள் மட்டுமே தேவை. செல்லுபடியாகும் பாஸ்போர்ட், சிவில் நிலையை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பனவே அவையாகும்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும், பதிவாளர் திணைக்களத்தின் புதிய சுற்று நிருபம் பிரகாரம், அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் இருக்கும் வாழ்க்கைத் துணைவர்கள் மருத்துவ வரலாறு, நாட்பட்ட நோய்கள் மற்றும் அவர்கள் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டதா அல்லது தடுப்பூசியைப் பெற்றதா என்பதை விவரிக்கும்  சுயமாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை  சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04