நேபாளத்தை 60 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கை இளையோர் அணி

By Vishnu

27 Dec, 2021 | 08:53 AM
image

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஆசியக் கிண்ண 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் நேபாளத்தை 60 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை இளையோர் அணி வெற்றிபெற்றது.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 322 எடுத்தது.

இலங்கை அணி சார்பில் சதிஷா ராஜபக்ஷ (131), சமிந்து விக்ரமசிங்க (111) ஆகியோர் சிறப்பாக விளையாடிய இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தனர்.

பந்து வீச்சில் ரவின் டி சில்வா (35/3), மத்திஷ பத்திரன (49/3) ஆகியோர் சிறப்பாக தமது பங்களிப்பினை வழங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர்களின் ஒருவரான ஷெவோன் டேனியல் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய சமிந்து விக்ரமசிங்க மற்றும் சதிஷா ராஜபக்ஷ ஆகியோர் ஜோடி சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 32.5 ஓவர்களில் 223 ஓட்டங்களை சேர்த்தனர்.

இந்த இரண்டு பேட்ஸ்மேன்களின் துடுப்பாட்ட வேகம் ஓவருக்கு ஏழு ஆக அமைந்தது. சதிஷா ராஜபக்ஷ 119 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 131 ஓட்டங்களை எடுத்தார். 

அதே நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் சமிந்து விக்ரமசிங்க 126 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 111 ஓட்டங்களை எடுத்தார்.

இந்த இரண்டு பேட்ஸ்மேன்களுக்கு மேலதிகமாக, அணித்தலைவர் துனித் வெல்லலா 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை எடுத்தார்.

323 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் 47.5 ஓவரில் 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அணி சார்பில் அதிகபடியாக அர்ஜுன் சவுத் (64), பிபி யாதவ் (46), பசீர் அகமட் (43) ஆகியோர் அதிகளவான ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right