கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி ஒருவர் ஸ்தளத்தில் பலி

By Vishnu

27 Dec, 2021 | 08:16 AM
image

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 96 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தளத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (27)காலை இடம் பெற்றுள்ளது. 

திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் ,திருகோணமலையை நோக்கி மண்கலந்த சிறிய கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன சாரதி ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்ததுடன் பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் வீதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது  வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41