பிரபல பிரான்ஸ் நடிகையும் பாடகியுமான அரியில்லே டொம்பஸ்லே, விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் சமீபத்திய பிரசாரத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

மக்களை சைவ உணவு உண்ண ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகவே அவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.விலங்குள் உரிமைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அரியில்லே டொம்பஸ்லே கூறியதாவது,

தடை செய்யப்பட்ட பழங்கள் என்று ஏதுமில்லை, மரக்கறியை உண்டு நாம் விலங்குகளையும், எமது பூமியும் பாதுகாக்க வேண்டும்.நாமே விலங்குகளை வளர்த்து உணவுக்காக அதை கொன்று அதன் இறைச்சியை உண்பது மிருகத்தனமான செயல் என்று தெரிவித்துள்ளார்.