கொழும்பு, புறநகர் பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

By Vishnu

27 Dec, 2021 | 07:14 AM
image

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகரின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகமானது தடை செய்யப்பட்டுள்ளது. 

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக சுமார் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவெல, தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபை பகுதிகள் மற்றும் கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு சுமார் 12 மணிநேரம் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right