மன்னாரில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

By T Yuwaraj

26 Dec, 2021 | 07:03 PM
image

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு  பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை 11 .30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதே வேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right