புசல்லாவையில் முச்சக்கரவண்டி - கார் விபத்து : ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

26 Dec, 2021 | 05:09 PM
image

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புசல்லாவை பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் குறித்த முச்சக்கரவண்டி மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 26.12.2021 இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, அதில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய டீ.எம்.ருபாநந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17