(இராஜதுரை ஹஷான்)
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க இருந்த முழுமையாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.
நாளை புகையித திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
24 கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் கடந்த 23 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.
புகையிரத பொதி சேவை விநியோகம், சாதாரன புகையிரத பயணச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட கடமைகளில் இருந்து விலகியுள்ளோம்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பதவி உயர்வு, இடமாற்றத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரதங்களையும் பயணிகள் புகையிரத சேவையில் ஈடுப்படுத்தவில்லை.
புயணிகளின் நலனைகருத்திற் கொண்டு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் இன்று நள்ளிரவு முதல் முழுமையான பணி புறக்கணிப்பில் ஈடுப்பட தீர்மானித்திருந்தோம்.
தொழிற்சங்க நடவடிக்கை குறித்து நாளை புகையிர திணைக்கள அதிகாரிகளுடன் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதால் தொடரவிருந்த முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம்.
நாளை பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் அடுத்தக் கட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிப்போம் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM