கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் விசேட தேவையுடையவர்கள் தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரனுக்கு டெப்ளிங் நிறுவன ஸ்தாபகர் அருட்திரு எஸ். எஸ். ஞானராசா நினைவுச் சின்னம் ஒன்றினை வழங்கினார். 

 விசேட தேவையுடைய மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் மேடையேற்றினர்.