நோா்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள வர்த்த நிலையம், இன்று விடியற்காலை 5.30 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனால் வர்த்தக நிலையம் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் தீயினால் வர்த்தக நிலையத்துக்குள் இருந்த தளபாடங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நோா்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.சதீஸ்