பதுளை –ஒலியாமண்டி என்ற இடத்தில் வீட்டுரிமை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு, கைகலப்பாக மாறியதில், 25 வயது இளைஞன் ஒருவர் கோரமாகத் தாக்கப்பட்டு மரணமான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஏற்பட்ட மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அது “ கொலை” என்று ஊர்ஜீதமாகியுள்ளது.
இந்நிலையில்,தாக்கப்பட்ட இளைஞன், பதுளை ஆரசினர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார்.
இம்மரணம் குறித்து, பதுளைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது ஐவர் கைது செய்யப்பட்டனர். குறித்த ஐவரும் பதுளை நீதவான் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி அவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர், போதைவஸ்துக்கு அடிமையானவரென்றும், அவர் இரு பெண்களை மணமுடித்தவரென்றும் , இரண்டாவது மனைவிக்குரிய வீடு, காணியை தனக்கு உரிமையாக்கும் படி வற்புறுத்தியதையடுத்தே, வாக்குவாதங்களும், கைகலப்பும்இடம்பெற்றமை பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த கொலை குறித்து பதுளை பொலிஸ் நிலையத்தில் விசாரனைகள் இடம்பெற்ற வேளையில், பொலிஸ்நிலையம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM