இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரே இல்லிங்வொர்த் தனது 89 ஆவது வயதில் காலமானார்.

Image

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சனிக்கிழமையன்று உயிரிழந்துள்ளார்.

புட்சேயில் 1932 ஆம் ஆண்டு பிறந்த அவர் ஆஃப் ஸ்பின்னிங் சகலதுறை வீரராக 1951 இல் தனது 19 வயதில் முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அவர் 1958 முதல் 1973 வரை இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1836 ஓட்டங்களையும், 122 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

அவர் 1970/71 இல் இங்கிலாந்தின் 2-0 என்ற புகழ்பெற்ற ஆஷஸ் வெற்றியின்போது அணியை தலைமை தாங்கி வழிநடத்தினார்.

ரே இல்லிங்வொர்த் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்மாக 24,134 ஓட்டங்களையும் 2,072 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.