கே .குமணன் 

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் 24.12.21 அன்று இடம்பெற்றுள்ளது 

பாடசாலை சிறுமிகள்மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து 24.12.21 அன்று முல்லைத்தீவு பொலிசாரால் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் 25.12.21 இன்று  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க நீதிமன்று உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் வவுனியா சிறையில் தடுத்துவைப்பதற்காக சிறைச்சாலைகள் பேருந்தில் அழைத்துசெல்லப்பட்டுள்ளார்.