ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் மோட்டர் ப்ளஸ் லோயல்ட்டி ரிவோட்ஸானது நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் பூரண வாகன காப்புறுதி உரிமையாளர்களுக்கு பண்டிகைக் கால சலுகைகளையும் விலைக்கழிவுகளையும் வழங்குகின்றது.

இலங்கையின் முன்னணி வாகன காப்புறுதிச் சேவை வழங்குனராக வாடிக்கையாளர்களுக்கு என்றும் சிறப்பு சேவை அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பதோடு பூரண காப்புறுதி உரிமையாளர்களுக்கு லோயல்ட்டி ரிவோட்ஸின் கீழ் சலுகைகளை வழங்கும் இலங்கையின் ஒரேயொரு வாகன காப்புறுதி நிறுவனமாக ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் மோட்டர் ப்ளஸ் இனை குறிப்பிடலாம். 

இதன் கீழ் சூரிய ரிசோட் என்ட் ஸ்பா, சீகிரிய கெசென்ட்ரா க்ளச்சர் ரிசோட், அர்ள்ஸ் ரஜரட்ட ஹோட்டல், லக்ராஜ் ஹோட்டல், ட்ரைப் யால, சிட்ரஸ் வஸ்கடுவ மற்றும் ஹிக்கடுவ ஹோட்டல், ஜோஸ் ரிசோட், மோக்ஷ ஹோட்டல், தம்புள்ளை ஒக்சிடன்டல் பெரடைஸ் ஹோட்டல் மற்றும் ஈகல் ரீஜன்சி ஹோட்டல் மூலம் 50 % வரை விலைக்கழிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் ரு ரூ ர் வீல்ஸ், ட்ரகோ ஒட்டோ கெயா, ஐ கெயா வொஷ், ஸ்பொட் ஒட்டோ கெயா சிட்டி, ப்ரவுன்ஸ் ஹைப்ரிட் கெயா, பிங்க் ஒட்டோ ஷொப், ஒட்டோ மிராஜ், ஹைப்ரிட் ஹப் மற்றும் நிவ்வென்ச்சர் ஆகிய சேவை வழங்குனர்களிடமிருந்து 50மூ வரையில் விலைக்கழிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் நவலோக்க ஹொஸ்பிட்டல்ஸ் இடமிருந்து 20% வரையிலும் சர்ட்டிஸ் ஹோம் நர்சிங் என்ட் ஸ்விப்ட் கெயா இடமிருந்து விசேட வருடாந்த பெக்கேஜ்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புண்டு.

யூ ட்ரங்க் வீ ட்ரைவ் இடமிருந்து 10% மற்றும் SJC ரிக்கவரியிடமிருந்து அவசர வேளைகளில் இழுத்துச் செல்வதற்கான வசதிகள், ஹொரைசன் எடியுகேஷனில் பதிவு செய்வதற்கான விசேட சலுகைகள் மற்றும் ஸ்பெக்ஸ் ஐ கெயாவிடமிருந்து விசேட விலைக்கழிவுகளையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு.

ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் மோட்டர் ப்ளஸ் பூரண மோட்டார் வாகன காப்புறுதியாளர்களுக்கு அவர்களது பூரண மோட்டார் வாகன காப்புறுதி அட்டையை உரிய சேவை நிலையத்தில் முன்வைப்பதால் இச்சிறப்பு சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புண்டு.

இலங்கையின் முன்னணி மோட்டார் வாகன காப்புறுதியாளரான ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் மோட்டர் ப்ளஸ் சந்தைக்கேற்றவாறு நவீன காப்புறுதி தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குவதோடு நாட்டின் முன்னணி வாகன முகவர் நிலையத்துடன் ஒன்றிணைந்து, நாடு முழுவதும் பரந்துபட்ட 24/7 நம்பிக்கை மிகு சேவையினை வழங்கி சந்தையில் முதல் நிலை மோட்டார் வாகன காப்புறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.

மோட்டர் ப்ளஸ் உரிமையாளர்களுக்கு மேலதிக நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸின் துரித அழைப்பான 0112357357 என்ற இலகக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக அல்லது www.srilankainsurance.com  இல் பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.