நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் விஷாலுடனான காதலை முறித்துக் கொண்டார் என பரவிய வதந்திக்கு மீண்டும் ஒரு டுவீட்டை போட்டு வரலக்ஷ்மி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வரலக்ஷ்மி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில், 'காதல் முறிவுகள் மிகவும் தரம் தாழ்ந்துள்ளன. 7 ஆண்டு காதல் உறவை ஒருவர் தனது மேனேஜர் மூலம் முறித்துள்ளார். உலகம் எங்கே செல்கிறது. காதல் எங்கே உள்ளது?' என்று பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அது விஷாலுடனான காதல் முறிவு தான் என்று கருதி பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வதந்திகள் பரவியது. இந்நிலையில், அதற்கான விளக்கத்தை வரலக்ஷ்மி தனது டுவிட்டர் பக்கத்தில் அளித்துள்ளார்.

இது தொடர்பான அவரது டுவீட்டில், 'என்னுடைய கடந்த டுவீட்டின் மூலம் பலவாறு வதந்திகள் பரவி வருகின்றன. எனது பணியுடன் மட்டுமே நான் டேட்டிங் செய்து வருகிறேன். இது எனது சொந்த வாழ்க்கை பற்றி கிடையாது. அனைவரும் அமைதியாக இருக்கவும்' என டுவீட் செய்துள்ளார்.