அருண் விஜய் நடிக்கும் 'யானை' பட டீசர் வெளியீடு  

By T Yuwaraj

24 Dec, 2021 | 12:35 PM
image

அருண் விஜய் நடிப்பில் தயாராகிவரும் 'யானை' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.

'ஸ்பீட் ஸ்கிரிப்ட் ஸ்டார்' இயக்குநர் ஹரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'யானை'. இதில் அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் யோகிபாபு, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, இமான் அண்ணாச்சி, ராதிகா சரத்குமார், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுபெற்று, தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான 'யானை' பட டீசரில், 'இவனுக்கு தூக்கி சுமக்கவும் தெரியும். தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்' என்ற வசனம் இடம்பெற்றிருக்கிறது. இதனால் இந்த டீஸருக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சக்திவேல் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right