நாட்டின் நெருக்கடிக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகளே காரணம் - ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்

Published By: Vishnu

23 Dec, 2021 | 06:49 PM
image

(ஆர்.யசி)

நாடு பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையும், நிதி அமைச்சும் அதேபோல் அரச அதிகாரிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஆளுங்கட்சி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும் இன்றுள்ள நிலைமைகளை அவதானிக்கும் போது அவ்வாறான மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்று காணப்படவில்லை 

நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இவற்றை கூறினார். 

இலங்கைக்கு என்ற ஒரு பொருளாதார கொள்கையை உருவாக்கிக்கொள்ள தவறியுள்ளமையே நாடு உற்பத்தித்துறையில் வீழ்ச்சியடைய பிரதான காரணமாகும். சர்வதேச கடன்களை பெற்றுக்கொண்டு வெறுமனே உண்டு செலவழித்து வருகின்றோமே தவிர அவசியமான எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. 

நாட்டில் ஊழலும், அரச மோசடிகளும் அதிகரித்துவிட்டன. இவ்வாறான நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. நாட்டின் அரசியல் கொள்கை எதுவாக இருந்தாலும் பொதுவான பொருளாதார கொள்கை ஒன்றையே  கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வறட்சியால் 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586...

2026-09-08 09:27:34
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2026-09-08 09:20:15
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றம்...

2026-09-08 09:01:06
news-image

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்...

2026-09-08 08:32:24
news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50