பயண சீட்டு விநியோகிக்கும் கடமையிலிருந்து விலகும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள்

Published By: Vishnu

23 Dec, 2021 | 05:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் புகையிரத பயண சீட்டு விநியோகிக்கும் கடமையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்காவிடின் டிசம்பர் 26 முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற புகையிரத சமிஞ்சை தொடர்பில் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுவதை விடுத்து மாற்று திட்டங்களை புகையிரத திணைக்களம் செயற்படுத்துகிறது.

புகையிரத திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்படுத்துவதை கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம். 

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவையினை செயற்படுத்துமாறு புகையிரத திணைக்களத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இதுவரையில் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

பயணிகளுக்காக விசேட புகையிர சேவையினை அறிமுகப்படுத்தும் வரையில் பயண சீட்டு விநியோக கடமையில் ஈடுப்பட போவதில்லை. அத்துடன் இதுவரையில் முன்னைக்கப்பட்டுள்ள பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் டிசம்பர் 26 முழுமையான பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை...

2023-12-07 17:37:22
news-image

ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியுடன்...

2023-12-07 17:57:20
news-image

முல்லை. கரியல் வயல், சுண்டிக்குளம் பிரதேசவாசிகள்...

2023-12-07 17:44:58
news-image

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை...

2023-12-07 16:44:34
news-image

தலவத்துகொட கிம்புலாவல வீதியோர உணவு கடைகளை...

2023-12-07 16:58:52
news-image

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள்...

2023-12-07 16:51:10
news-image

கொடிகாமம் வீதியில் இளைஞரை தாக்கிவிட்டு, வீடு...

2023-12-07 15:36:45
news-image

பொல்கொட ஆற்றில் குதித்து உயிருக்குப் போராடியவர்...

2023-12-07 15:37:57
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-07 15:10:59
news-image

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் விற்பனை...

2023-12-07 15:14:49
news-image

ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை

2023-12-07 14:40:24
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான்...

2023-12-07 14:17:35