புனரமைக்கப்பட்டு வரும் நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் இன்று பகல் நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான கழிவு நீர் அகற்றும் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புனரமைக்கப்பட்டு வரும் குறித்த வீதியின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நுவரெலியா ரூவான்எலிய பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒருவர், வீதியில் கொட்டப்பட்டிருந்த சரளை கற்களில் சருக்கி விழுந்த நிலையில், அவருக்கு பின்னால் வந்த நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான கழிவு நீர் அகற்றும் வாகனம் அவர் மீது மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.