பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து போட்டி ஒன்றின் போது காயமடைந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலை பகுதியில் இடம்பெற்ற கால்பந்து போட்டியொன்றின் போதே இவர் காயமடைந்துள்ளார்.