(இராஜதுரை ஹஷான்)
மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்காமலிருப்பது கவலைக்குரியது.
திறமையானவர்களுக்கு உரிய பதவி வழங்காமலிருப்பது தற்போதைய பிரச்சினைகளுக்கான மூல காரணியாக உள்ளது.
யுத்த காலத்தில் கூட இவ்வாறான நெருக்கடி நிலையை பொது மக்கள் எதிர்க்கொள்ளவில்லை என தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்குகு கருத்துரைக்கையில் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் பல சவால்கள் தோற்றம் பெற்றன.
அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொண்டோம். யுத்தம்,2007ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி, சுனாமி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண திறமையானவர்களுக்கு உரிய பதவி வழங்கப்பட்டது.தற்போது அவ்வாறான தன்மை கிடையாது.
மக்கள் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். எமது அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பது கவலைக்குரியது.
முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை . ஆகையால் எமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய பதவிகளுக்கு திறமையானவர்கள் நியமிக்காமல் இருப்பது தற்போது தாக்கம் செலுத்தியுள்ள பிரச்சினைகளுக்கு பிரதான காரணியாக அமைகிறது.
யுத்த காலத்தில் கூட இவ்வாறான நிலைமை தோற்றம் பெறவில்லை.மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவையாக உள்ளது.
யுகதனவி மின்நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தை பரிசீலனை செய்ய வேண்டிய தேவை கிடையாது என அமைச்சரவை அமைச்சர் குறிப்பி;ட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
ஒன்று அவருக்கு அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை வாசிக்கும் திறன் கிடையாது, வாசிக்க வேண்டும் என்ற அக்கறை கிடையாது.இ;வ்வாறான கருத்துக்கள் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அழகல்ல என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM