நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'வாத்தி' என பெயரிடப்பட்டு, தலைப்பு மற்றும் தலைப்புக்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் புதிய திரைப்படம் ' வாத்தி'. இதில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தொடங்குகிறது. படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் :சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் தனுஷ் கணித ஆசிரியராக நடிக்கிறார் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே நடிகர் தனுஷ் தற்போது 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இதனைத்தொடர்ந்து இவரது நடிப்பில் தயாராகும் 'வாத்தி' திரைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM