சுதந்திரக் கட்சி எத்தரப்பினருடன் இணைந்தாலும் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு பாதிப்பில்லை - ரொஷான் ரணசிங்க  

By T. Saranya

23 Dec, 2021 | 07:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எத்தரப்பினருடன் இணைந்து கூட்டணியமைத்தாலும் அது பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது அநாகரிகமான செயற்பாடாகும்.

அரசாங்கத்தின் கொள்கையுடன் ஒன்றினைந்து செயற்பட விருப்பமில்லாவிடின் அவர்கள் தாராளமாக அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுபீட்சமான எதிர்கால கொள்கையினை செயற்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

கடந்த இரண்டு வருட காலமாக கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தவும்,அதனால் தோற்றம் பெற்ற சவால்களை வெற்றிக் கொள்ளவும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான திட்டங்களும்,அபிவிருத்தி பணி செயற்திட்டங்களும் பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்து செல்லப்படுகிறது.

அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக உள்ள சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் கூட்டணி அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது அநாகரிகமானது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எத்தரப்பினருடன் கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் அது பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

எதிர்வரும் ஆண்டு முதல் அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படும்.நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.

சுதந்திர கட்சி அரசாங்கத்தின் கொள்கைகயுடன் ஒன்றினைந்து செயற்பட விரும்பாவிடின் அரசாங்கத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம் என்பதை பலமுறை பகிரங்கமாக அறிவித்துள்ளோம்.

அரச வரபிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு மக்களை தவறாக வழி நடத்துவது முறையற்ற செயற்பாடாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33