சந்தையில் தற்போது நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்ந்து மேலும் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார,

சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவிவருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். வங்கிகளில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவுவதால் கடனுக்கான ஆவணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

பால்மா மட்டுமன்றி இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

தற்போது மிக குறைந்த டொலர்களே கிடைத்து வருகின்றன. அதிலும் சில தாமதங்களே ஏற்படுகின்றன. 

அதேவேளை நியூஸிலாந்தில் இருந்தோ அவுஸ்திரேலியாவில் இருந்தோ பால்மா கப்பல் இலங்கையை வந்தடைவதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்களெடுக்கும். 

இதனால் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள பால்மா நாட்டை வந்தடைவதற்கு மேலும் இரண்டு மாதங்கள் செல்லலாம் என்றார்.