மட்டக்களப்பு உப்போடை ஆற்றில் உருக்குலைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலம் மட்டக்களப்பு மோகோந்திரன் வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய தோமஸ் காந்தமூர்த்தி செந்தூரன் என அவரது மனைவியினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் அப்பகுதியில் தேடினர்.
இந்நிலையில் அன்றைய தினம் காந்தமூர்த்தி செந்தூரன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி, உறவினர் தேடிவந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று உப்போடை பகுதி ஆற்றில் கரையொதிங்கிய சடலத்தை அவரது மனைவி பார்த்து அது தனது கணவர் என அடையாளம் காட்டியுள்ளனர்.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM