(சசி)

30 ஆண்டு கால யுத்தத்தின் பின் இலங்கை தற்பொழுது சமுக பொருளாதார அரசியல் உரிமைகளின் அடிப்படையில் செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுத்து  செல்லுவதை காணமுடிகின்றதென அமெரிக்காவின் மனித உரிமை மற்றும் உலக நாடுகளின் சமூக இயக்க செயற்பாட்டாளர்   டீயா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடாத்திய களஆய்வு தொடர்பில் 16 மாவட் டங்களை ஒன்றிணைத்து மனித உரிமை தொடர்பான  செயல் அமர்வொன்று இன்று   நீர்கொழும்பு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகத்தில்  இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஏற்படுத்தப் படும் அபிவிருத்திகள் அரசியல் சமூக பொருளாதார மேன்பாட்டுக்கான நோக்கை கொண்டவையாக இருக்க வேண்டும் .

சாதாரண மக்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர். அவர்களது மனித உரிமை கேள்விக் குறியாக உள்ளது. ஆகவே இந்த அரசு மக்களது உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் .

ஐக்கிய நாடுகளில் காணி உரிமையை  மனித உரிமையாகமற்ற முயல்கின்றோம் இது மிக முக்கியமான விடயம்.

அது மட்டுமல்லாமல் இலங்கையின் சமாதானத்துக்கு மற்றும் அதன் உரிமைகளுக்கும் ஏற்ற செயற்பாடுகளாகவே இருக்க வேண்டும் என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.