நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் விழப்போகின்றது - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

By T Yuwaraj

22 Dec, 2021 | 09:17 PM
image

(ஆர்.யசி)

சர்வதேச கடன் நெருக்கடிகளில் இருந்து விடுபடும் ஒரே நோக்கத்தில் அரசாங்கம் அத்தியாவசிய தேவைக்காக ஒதுக்க வேண்டிய சகல பணத்தையும் கடன்களை செலுத்த உபயோகிக்கின்றமை நாட்டில் பாரிய நெருக்கடியை உருவாக்கப்போவதாகவும், இதனால் பொதுமக்கள் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலைமை உருவாகிக்கொண்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Surviving the World economic crisis – The Island

பொருளாதார நெருக்கடியை கையாள அரசாங்கம் மாற்று தீர்மானங்களை எடுப்பதை விடவும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது ஆரோக்கியமானது என்ற ஆலோசனையையும் முன்வைக்கின்றனர்.

பொருளாதார ரீதியில் நாடு பாரிய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை சுமை அதிகரிப்பு நிலையிலும் நாட்டின் முகாமைத்துவம் குறித்து வினவிய போதே அவர்கள் இதனை தெளிவுபடுத்தினர். 

இது குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பிரியங்க குணசிங்க தெளிவுபடுத்துகையில்,

நாம் பெற்றுக்கொண்ட சர்வதேச கடன்களை முறையாக பயன்படுத்தியிருந்தால் இன்றைய நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்காது.

நாம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த தவறினால் கடன்களை மீள செலுத்த முடியாத பட்டியலில் தள்ளப்படுவதுடன் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களுக்கும், வெவ்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கும் தள்ளப்படும். 

ஆனால் அவ்வாறான நிலையொன்று உருவாகும் என நினைக்கவில்லை. அரசாங்கம் மாற்று வழிமுறைகளை கையாளும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனினும் பொருளாதாரத்தை முறையாக இயக்கும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் அவதானிக்க முடியவில்லை, சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்தும் தவறான புரிதல்களை அரசாங்கம் கொண்டுள்ளதாகவே வெளிப்படுகின்றது. நெருக்கடியை கையாள அரசாங்கம் மாற்று தீர்மானங்களை எடுப்பதை விடவும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது ஆரோக்கியமானது. 

இறக்குமதி, கடன்களை கையாளும் விதம் மற்றும் குறுகியகால நெருக்கடிகளை சமாளிக்கும் வேலைத்திட்டங்களை சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக கையாள முடியும்.

எனினும் நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வதில் பல நெருக்கடிகள் உள்ளன. இவற்றை கையாள முறையான பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்று அவசியம். ஆகவே சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும், அது அவசியமான ஒன்றாகும். 

அதேபோல் ஏனைய நாடுகளை விடவும் எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் நெருக்கடியில் உள்ளது என்பதை வெளிப்படையாக கூறியாக வேண்டும். இதன் தாக்கமே இன்று நாட்டில் வாழ்வாதார நெருக்கடி நிலையொன்று உருவாக காரணமாக அமைந்துள்ளது என்றார்.

பேராசிரியர் ரொஹான் சமரஜீவ இது குறித்து கூறுகையில், இலங்கை  அடுத்த ஆண்டில் மொத்தமாக 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேசத்திற்கு செலுத்த வேண்டியுள்ள போதிலும் முதல் கட்டத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதில் சிக்கல் இருக்காது என்பதே எமது கணிப்பாகும். 

ஆனால் வருட இறுதியில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை  பெற்றுக்கொள்ளும் பணத்தை சேமித்து சகல பணத்தையும் கடன்களுக்காக செலுத்த வேண்டியுள்ள நிலையில் நாட்டில் பஞ்சமும், நெருக்கடியும் உருவாகும். கடன்களில் இருந்து விடுபடுவது மட்டுமே நோக்கமாக இருக்கின்ற நிலையில் சகல அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்படும். 

கொவிட் நிலைமைகளை மாத்திரம் சாடி நாட்டின் நெருக்கடிகளுக்கு விடை தேடக்கூடாது. அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவமே சகல நெருக்கடிகளுக்கும் காரணமாகும் என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பணிப்பாளர் வின்சன் மேர்வின் கூறுகையில், வெறுமனே வெளிநாட்டு கையிருப்பை மாத்திரம் கையில் வைத்துக்கொண்டு தீர்வுகளை தேடக்கூடாது. மாற்று வழிமுறைகளை சிந்திக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் எமக்கு தற்காலிக தீர்வாக இருக்கலாம் 

ஆனால் அதனையும் தாண்டி பொருளாதார மறுசீரமைப்பு என்பது கண்டிப்பாக அவசியமான ஒன்றாகும். சர்வதேச கடன்களில் மாத்திரம் தங்கி எம்மால் நகர முடியாது. கொவிட் போன்ற உலகளாவிய தொற்றுகள் காரணமாக எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி காண்கின்றது என்றால்  அதற்கு எமது பொருளாதார கொள்கையே காரணமாகும். இப்போது மாற்று வேலைத்திட்டம் எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் கடினமான பயணமொன்றை முன்னெடுத்தாக வேண்டும்.  

இப்போதுள்ள நிலைமையில் வாழ்க்கை சுமை மேலும் அதிகரிக்கும், அதனை தவிர்க்க முடியாது. மக்கள் அதற்கும் தயாராக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34
news-image

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே...

2022-11-28 17:02:23