அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு செல்ல தயாராக வேண்டும் ; ஜகத் குமார

By T. Saranya

22 Dec, 2021 | 09:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாரிய பொருளாதார பிரச்சினைக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு வாழ்வதற்கு முடியுமான பொருளாதார சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு செல்வதற்கு தயாராக வேண்டும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு அரசாங்கம் எவ்வாறான தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டி இருக்கின்றது என்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களுக்கு வாழ்வதற்கு ஏற்றவகையிலான சூழலை ஏற்படுத்துவதற்கே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.

என்றாலும் கொவிட் தொற்று காரணமாக அரசாங்கம் எதிர்பார்த்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துசெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று அரசாங்கத்துக்கு கிடைத்துவந்த வருமான வழிகளும் தடைப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றது. 

என்றாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரின் அனுபவத்துடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அதற்காக பாரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  என்றாலும் தேர்தலில் அரசாங்கத்துக்கு  கிடைக்கப்பெற்ற வாக்கு அலையுடன் வந்த சிலர், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், பிரச்சினையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. 

வியத்மக என தெரிவித்துக்கொண்டு பதவிகளை எதிர்பார்த்தே இவர்கள் அரசாங்கத்துக்குள் வந்திருக்கின்றனர். இவர்களின் ஒருசிலரின் நடவடிக்கையை மக்கள் இன்று நிராகரித்து வருகின்றனர்.

அத்துடன் வியதமக என தெரிவித்துக்கொண்டிருக்கும் ஒருசிலரின் நடவடிக்கையால் இன்று ஒட்டுமொத்த அரசாங்கமும் மக்களின் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கின்றது.

அதனால் மக்களின் பிரச்சினையை அனம் கண்டு அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும். 

2015க்கு முன்னர்பாேன்று தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதுபோன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் முறையான வேலைத்திட்டம் அமைத்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான பொருளாதார சூழலையும் ஏற்படுத்திக்காெடுக்கவேண்டும். அரசாங்கம் என்றவகையில் அதனை செய்ய தவறினால், எதிர்க்கட்சிக்கு செல்வதற்கு தயாராகவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41
news-image

பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில்...

2022-10-05 12:24:53
news-image

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹசிம்...

2022-10-05 12:58:17
news-image

இலங்கை தொடர்பான இறுதி நகல்வடிவம் சமர்ப்பிப்பு...

2022-10-05 12:10:30
news-image

தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்...

2022-10-05 12:02:41
news-image

உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில்...

2022-10-05 12:15:18
news-image

போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளரை இடமாற்றக்...

2022-10-05 12:42:47
news-image

பல்கலைக்கழகங்களில் பல கொடுமைகள் இடம்பெறுகின்றன -...

2022-10-05 11:30:12
news-image

சிறுவர் தினத்தன்று மிருகக்காட்சிசாலையில் அதிக வருமானம்

2022-10-05 11:24:46
news-image

அடக்குமுறை தொடர்ந்தால் ஆட்சியிலிருந்து விரைவில் வெளியேற...

2022-10-05 11:28:33
news-image

வெளியானது எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பான...

2022-10-05 12:35:42