(சசி)

கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச நிதி நகர திட்டத்திற்கு எதிராக நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பாட்டம் இன்று காலை  10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை கம்மல் தொட்ட தொடக்கம் மோதர வரையில்  வசிக்கும்  மீனவ பொதுமக்களாலால் ஒன்றிணைத்து  நடாத்தப் பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.