மறு அறிவித்தல்வரை வாகன சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகிக்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்

Published By: Digital Desk 4

22 Dec, 2021 | 09:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வாகன சாரதி அனுமதி பத்திரம் விநியோகிக்கும் ஒருநாள் சேவை மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை காரியாலயங்களில் இடம்பெற்றிருக்கும் பாரிய மோசடி வியாபார காரணமாகவே ஒருநாள் சேவை உடன் அமுலுக்கு வரும்வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக  மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: சாரதி அனுமதிப் பத்திரம் | Virakesari.lk

அதன் பிரகாரம் சாரதி அனுமதி பத்திரம் அச்சிடும் பிரதான காரியாலயமான மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேகர காரியாலயம், அநுராதபும் மற்றும் அம்பாந்தோட்டை காரியாலயங்களிலும் மறு அறிவித்தல்வரை ஒருநாள் சேவையின் கீழ் புதிய வாகன சாரதி அனுமதி பத்திரம் விநியோகிக்கவேண்டாம் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு வழங்கிய ஆலாேசனைக்கமையவே ஒருநாள் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அநுராதபும் மற்றும் அம்பாந்தோட்டை காரியாலயங்கள் ஊடாக நடைமுறை பரிசோதனைகள் முடிவுற்ற தினத்துக்கு மறு தினமே உடனடியாக வாகன அனுமதி பத்திரம் அச்சிட்டு வழங்குவதாகவும் அந்த காரியாலய அதிகாரிகள் சிலர் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் ராஜாங்க அமைச்சருக்கு  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இருந்தபோதும் வழமையான முறையில் சாரதி அனுமதி பத்திரம் அச்சிடும் நடவடிக்கை இந்த காரியாலயங்கள் ஊடாக தொடர்ந்து இடம்பெறுவதுடன் அனுமதி பத்திரம் புதுப்பித்தல், காணாமல் போன சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடுதல் உட்பட காரியாலயத்தின் ஒருநாள் சேவைகள் ஊடாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

வெளிநாட்டுக்கு செல்வது அல்லது அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் ஒருநாள் சேவை ஊடாக  புதிய சாரதி அனுமதி பத்திரம் அச்சிடப்படமாட்டாது. இதனைத்தவிர ஏனைய ஒருநாள் சேவைகள் வழமையான முறையில் திணைக்களம் ஊடாக இடம்பெறும்.

நடைமுறை பரிசோதனைகள் முடிந்த பின்னர் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு, சாரதி அனுமதி பத்திரத்தை தபால் ஊடாக விநியாேகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29