பாகிஸ்தானில் கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்து சேதப்படுத்திய இளைஞர் 

By T Yuwaraj

22 Dec, 2021 | 09:06 PM
image

பாகிஸ்தானில் கோவில் ஒன்றுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென சுவாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய வாலிபர்

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள நரேன்புரா நகரில் சுவாமி நாராயணன் கோவிலில், நேற்று காலை குறித்த பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கோவிலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் திடீரென சுவாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த இந்துக்கள் குறித்த இளைஞரை மடக்கி பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கோவிலுக்குள் புகுந்து சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் கோபமடைந்த உள்ளூர் இந்து சமூகத்தினர் பொலிஸ் நிலையம் முன்பு திரண்டு இந்துக்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17
news-image

மிஸ் ஏர்த் 2022 அழகுராணியாக தென்கொரியாவின்...

2022-11-30 16:14:08
news-image

மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தைக்கு 107...

2022-11-30 16:36:12