இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் இரவுநேரத்தில் கடுங்குளிர் நிலவுவதால் லக்னோ மிருகக்காட்சிசாலையில் உள்ள உயிரினங்களை செயற்கைமுறையில் கதகதப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இரு வாரங்களாகக் கடுங்குளிர் நிலவி வருகிறது. 

இந்நிலையில் லக்னோ உயிரியல் பூங்காவில் வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தி உயிரினங்களுக்குக் கதகதப்பான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

இதன்படி, யானை குட்டிகளுக்கு போர்வைகளும், பாம்பு உள்ள அறைக்கு வெப்ப மூட்டியும் வழங்கப்பட்டுள்ளது.

குளிர்காலச் சூழலுக்கு ஏற்றபடி உயிரினங்களுக்கு அதிக ஊட்டச் சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகப் பூங்கா துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.