(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று அதிகாலை புகையிரத்துடன் மோதுண்டு ஆறு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அதிகாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரம் 155 கட்டைப்  பகுதியிலுள்ள காளி கோவிலுக்கு அருகிலுள்ள புகையிரத பாதையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதில் முதலாம் குறுக்குத் தெரு பாரதிபுரத்தைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் வயது 54 என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் இதற்கு முன்னரும் விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத விபத்தொன்றில் மயிரிழையில் உயிர் தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.