மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல தனியார் விடுதிக்கு அருகாமையில் உள்ள வாவி பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

குறித்த சடலம் உப்போடை வாவி பகுதியில் உருக்குலைந்த நிலையில் இருக்கின்ற காரணத்தினால் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.

 சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது