கோழியைப் போல முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கத் தயாராகி வந்த டைனோசர் கருவைக் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

தெற்கு சீனாவில் உள்ள கன்சோவில் இந்த டைனோசர் கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆராய்ச்சியாளர்கள் இது குறைந்தது 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடுகின்றனர்.

இது பற்கள் இல்லாத தெரோபாட் அல்லது ஓவிராப்டோரோசர் டைனோசர் வகையைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த கருவுக்கு 'பேபி யிங்லியாங்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Image

இது "வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த டைனோசர் கரு" என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் ஃபியோன் வைசும் மா கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு டைனோசர்களுக்கும் நவீன காலத்து பறவைகளுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய சிறந்த புரிதலையும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கியுள்ளது. 

புதைபடிவ ரீதியில் கண்டெடுக்கப்பட்ட கருவானது "டக்கிங்" என்று அழைக்கப்படும் சுருண்ட நிலையில் இருந்ததைக் காட்டுகிறது, இது பறவைகள் குஞ்சு பொரிப்பதற்கு சற்று முன்பு காணப்படும் நிலையாகும்.

நவீன காலத்து பறவைகளும் இத்தகைய நிலைகளை கொண்டுள்ளமையினால், அவற்றின் மூதாதையர்கள் டைனோசராக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.