(எம்.மனோசித்ரா)

இழப்பீடுகளை வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளங் காணல் மற்றும் பொருத்தமான வகையில் கூட்டாக இழப்பீடுகளை வழங்குவதற்காக 2018 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இழப்பீடுகளுக்கான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம் குறித்து ஆளும் - எதிர்த்தரப்பு கடும்  வாய்த்தர்க்கம் | Virakesari.lk

குறித்த சட்டத்தின் 11 ஆம் உறுப்புரையின் பிரகாரம் இழப்பீடுகளை வழங்குவதற்கான கொள்கைகளை வகுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு உள்ளாகியவர்களின் தகுதிகளைத் தீர்மானித்தல் போன்ற அளவுகோல்களைத் தயாரித்து அமைச்சரவைக்கு சமர்ப்பித்தல் போன்றன இழப்பீட்டு அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கமைய, மேற்படி அலுவலகத்தால் குறித்த தரப்பினர்களுடன் ஆராய்ந்து கொள்கைகள் மற்றும் வழிகாட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறித்த கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.