(இராஜதுரை ஹஷான்)
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்கு தீர்வு கோரி புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
சுமார் 700 புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பல வருடகாலமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. கனிஷ்ட புகையிரத சேவையாளர் பதவி வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை உள்ளிட்ட பல பிரச்சினைகள் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்திற்குள் காணப்படுகிறது.
பிரச்சினைகள் குறித்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினரிடமும்,போக்குவரத்து துறை அமைச்சரிடமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM