ஒரு லீட்டர் பெற்றோலில் அரசாங்கத்துக்கு 69 ரூபா இலாபம் - சம்பிக்க

Published By: Vishnu

21 Dec, 2021 | 06:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் மூலம் அரசாங்கத்துக்கு 69 ரூபா இலாபம் கிடைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பொரலஸ்கமுவ பெபிலியான பிரதேசத்தில் இன்று நடத்திய சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைந்துசெல்லும் நிலையில் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை அதிகரித்திருக்கின்றது. 

மேற்குலகில் பரவிவரும் கொவிட் தொற்று மற்றும் ஐக்கிய நாடுகள், சீனா மற்றும் இந்தியா தங்களது எண்ணெய் தொகையில் இருந்து ஒரு பகுதியை வர்த்தக சந்தைக்கு விட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

2021 டிசம்பர் மாதம் 92 வகை பெற்றோல் பெரல் ஒன்று 85 டொலருக்கே கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் ஒரு டொலரின் உத்தியோகபூர் பெறுமதியான 203 என்ற அடிப்படையில் ஒரு பெரல் சுமார் 17,255 ரூபாவாகும். அதன் பிரகாரம் சாதாரணமாக பெற்றோல் ஒரு லீட்டர் 108 ரூபாவாகும். அதன் பிரகாரம் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் மூலம் 69 ரூபா இலாபம் பெறப்படுகின்றது. அதேபோன்று 95 வகை பெற்றோல் லீட்டர் ஒன்றின் மூலம் 99 ரூபா இலாபம் கிடைக்கின்றது.

மேலும் போக்குவரத்து செலவு, கூட்டுத்தாபனத்தின் செலவு விற்பனையாளர்களின் செலவுகள் அனைத்தையும்  லீட்டருக்கு 10 ரூபா என எடுத்துக்கொண்டால் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் மூலம் 59 ரூபா இலாபம் பெறப்படுகின்றது. அதேபோன்று 95 வகை பெற்றோல் லீட்டர் ஒன்றின் மூலம் 89 ரூபா இலாபம் கிடைக்கின்றது.

அதேபோன்று இரண்டு வகை டீசல் எண்ணெய்களையும் 85 டொலர்களுக்கே டிசம்பர் மாதம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அப்படியாயின் இரண்டுவகை டீசல்கள் மூலம் முறையே 26 ரூபா மற்றும் 41ரூ பா என்ற அடிப்படையில் இலாபம் இருக்கின்றது.

அத்துடன் எரிபொருட்களின் விலை அதிகரிக்க முடியுமாக இருப்பது நிதி அமைச்சரின் அனுமதியுடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்காகும். ஆனால் எரிபொருட்களின் தேவையை குறைத்துக்கொள்வதற்காக எரிபொருட்களின் விலை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய வங்கியின் ஆளுநரே முன்வைத்தார்.

அதன் பிரகாரம்  விலை அதிகரிப்பை கூட்டத்தாபனம் மேற்கொண்டது. அதனால் வலு சக்தி அமைச்சினால் பொதுஜன பெரமுன, பெற்றொலிய கூட்டுத்தாபனம் உட்பட நிறுவனங்களுக்கு பாரிய குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, விலை அதிகரிப்பை மூடிமறைக்கும் ஊடக  சந்திப்பொன்று எதிர்வரும் தினங்களில் இடம்பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33