(நெவில் அன்தனி)
பங்களாதேஷில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை நடைபெறவுள்ள மத்திய ஆசிய வலய ஆடவர் பிரிவுக்கான பங்கபந்து சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியிலும் மகளிர் பிரிவுக்கான பங்கமாதா சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியிலும் பங்குபற்றுவதற்காக இலங்கையின் சிரேஷ்ட ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் டாக்கா பயணமானார்கள்.
ஆடவர் பிரிவில் இலங்கை, மாலைதீவுகள், நேபாளம், பங்களாதேஷ், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகளும் மகளிர் பிரிவில் இந்த 5 நாடுகளுடன் கிர்கிஸ்தானும் பங்குபற்றுகின்றன.
இந்த இரண்டு பிரிவுகளிலும் இடம்பெறும் அணிகள் ஒன்றையொன்று லீக் அடிப்படையில் எதிர்த்தாடும். லீக் சுற்று முடிவில் நிரல்படுத்தல் போட்டிகள் நடத்தப்படும்.
இப் போட்டியில் இலங்கை அணியினர் திறமையாக விளையாடி மிகச் சிறந்த பெறுபேறுகளை ஈட்டுவர் என நம்புவதாக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எஸ். நாலக்க தெரிவித்தார்.
இந்த சுற்றுப் போட்டியை முன்னிட்டு அனுவபம் வாய்ந்த வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய அணிகளிடமே இலங்கை அணிகள் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
இலங்கை ஆடவர் அணிக்கு லசிது மெத்மாலும் மகளிர் அணிக்கு திலினி வாசனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஆடவர் அணி தனது ஆரம்பப் போட்டியில் மாலைதீவுகள் அணியை 24ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.
தொடர்ந்து உஸ்பெகிஸ்தானுடன் 25ஆம் திகதியும் நேபாளத்துடன் 26ஆம் திகதியும் பங்களாதேஷுடன் 27ஆம் திகதியும் இலங்கை விளையாடும்.
இலங்கை மகளிர் அணி நேபாளத்துடன் 23ஆம் திகதியும் கிர்கிஸ்தானுடன் 24ஆம் திகதியும் மாலைதீவுகளுடன் 25ஆம் திகதியும் பங்களாதேஷுடன் 26ஆம் திகதியும் உஸ்பெகிஸ்தானுடன் 27ஆம் திகதியும் விளையாடும்.
இலங்கை ஆடவர் அணியில் லசிது மெத்மால் (தலைவர்), ஏ. டபிள்யூ. லக்மால், இசுறு மதுஷான், விதுர ப்ரபாத், வினோத் மதுரங்க, மலித் தினிந்து, அயேஷ் தில்ஹான், தருஷ சமத், மஹேல இந்தீவர, ஹரித்த ஹஷான், தனுஷ்க தில்ஷான், ருவிர சம்பத் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
ஆடவர் அணிக்கு சன்ன ஜயசேகர தலைமைப் பயிற்றுநராகவும் நிஷான் இந்திக்க உதவி பயிற்றுநராகவும் கான்தசிறி மீகமுவகே முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மகளிர் அணியில் திலினி வாசனா (தலைவர்), ஜே. டபிள்யூ. பீ. துஷாரி, பாக்யா செவ்மினி, அப்சரா செவ்மாலி, அயேஷா மதுரிக்கா, சஞ்சீவனி கருணாரத்ன, காஞ்சனா விஜேகோன், கவிஷா லக்ஷானி, சத்துரிக்கா ரணசிங்க, அஷானி சமோதிக்கா, ப்ரீதிக்கா ப்ரமோதனி, சஜினி மேனுகா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
மகளிர் அணிக்கு சார்ள்ஸ் திலக்கரத்ன தலைமைப் பயிற்றுநராகவும் சந்திமா அக்கரவிட்ட உதவித் தலைவராகவும் க்ரிஷான்தி ஜயவர்தன முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு அணியினரும் பங்களாதேஷுக்கு புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் காஞ்சன ஜயரத்ம, பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாலக்க ஆகியோரை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM