கபில்

“இந்தியா,  இலங்கையில் தனது தலையீட்டுக்கு வலுவானதொரு காரணத்தை எதிர்பார்க்கிறது. தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்த கோரிக்கையை அடிப்படையாக வைத்து இன்னொரு தலையீட்டுக்கான சூழலை ஏற்படுத்த திட்டமிடுகிறது"

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை பொதுவான தளம் ஒன்றில் இருந்து வெளிப்படுத்தும் நோக்கில், இரண்டாவது சந்திப்பு கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்றிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் முதல் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

அதற்குப் பின்னர், மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும் இரா.சம்பந்தனைச் சந்தித்து, இந்த முயற்சிகளுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இந்த கூட்டங்களை ஒழுங்குபடுத்தும், ரெலோ முன்னதாக அவ்வாறு செய்திருக்கவில்லை. இரா.சம்பந்தனுடன் அதுபற்றி பெரிதாக கலந்துரையாடியிருக்கவுமில்லை.

மனோகணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் இரா.சம்பந்தனைச் சந்தித்த பின்னர் தான், அவர் நேரடியாகப் பங்கேற்க இணங்கினார்.

இரண்டாவது கூட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றிருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-19#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/