(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. 

அதிமாத்திரமன்றி நிதி அமைச்சர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவும் முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் அமைச்சரவையில் ஏதேனும் தீர்மானம் எடுக்கப்பட்டதா என்று கேட்டக்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.