சுபத்ரா

அண்மைய நாட்களில், இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து இரண்டுமுக்கியமான விடயங்கள் பேசு பொருளாக காணப்பட்டன.

ஒன்று, கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டசம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்ட, முன்னாள் கடற்படைத் தளபதிஅட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை.

இரண்டாவது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால்,  இரண்டு முன்னாள் படை அதிகாரிகள் மற்றும் அவர்களின்குடும்பத்தினருக்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட்டமை.

சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கு முதல் நாள், அட்மிரல் ஒவ் தபிளீட் வசந்த கரன்னகொட, வடமேல் மாகாண ஆளுநராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்நியமிக்கப்பட்டமை பரவலான எதிர்ப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பானவழக்கில், 14 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்ட கரன்னகொட, அண்மையில், சட்டமாஅதிபரால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்ளும், சட்டமா அதிபரின் முடிவுசர்வதேச அளவில் கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியிருந்தது.

அவ்வாறான ஒருவருக்கு வடமேல் மாகாண ஆளுநர் பதவி அளிக்கப்பட்டதுவிமர்சனங்களை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-19#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/