பட்டக் கயிற்றில் நபர் ஒருவர் வானத்தை நோக்கி 40 அடி உயரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக நபர் ஒருவர் பட்டக் கயிற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.

அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு கையைவிடு..., உன்னால் முடியும்..., உன்னால் முடியும் வாடா..., பயப்பட வேண்டாம்..., பயப்பட வேண்டாம்... என கூறி காப்பாற்ற முயன்றனர்.

இந்நிலையில், பட்டத்தில் கட்டப்பட்ட கயிற்றை பின்தொடர்ந்து கையை விட்ட நிலையில்  நிலத்தில் வீழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சிறு காயங்களுடன் நபர் உயிர் தப்பினார். 

இந்தக் காட்சி காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.