டிஜிட்டல் தள நாயகியாகும் நயன்தாரா

Published By: Digital Desk 4

21 Dec, 2021 | 02:36 PM
image

தமிழ் திரை உலகத்தின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஓக்சிஜன்' என்ற புதிய திரைப்படமும், பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுக இயக்குநர் ஜி. கே. விக்னேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'ஓக்சிஜன்'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட முன்னணி டிஜிட்டல் நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் தயாரான 'மூக்குத்தி அம்மன்', 'நெற்றிக்கண்' ஆகிய இரண்டு படங்களும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' மற்றும் 'கனெக்ட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவரது தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 'ராக்கி' படத்தின் வணிகத்திற்காக இவர் பங்குபற்றும் ப்ரோமோ பாடல் ஒன்று வெளியாகி, ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35